மேடையில் தோன்றுவது என்றாலே பலருக்கு பயம் ஏற்படும். தனித்திறமைகள் இருந்தாலும் அவற்றை வெளிப்படுத்த பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த தயக்கத்தை உடைத்து, ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது திறன்களை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் மேடையாக கோவை அருகே புதுப்பாளையம் பகுதியில் ‘மிஸ்டர் அண்ட் மிஸ்’ பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

L & I நிறுவனம் சார்பில், அதன் நிறுவனர் லெர்ரோய்சன் (Lerroyzen) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள், திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பெண்களின் தன்னம்பிக்கையையும் தனித்திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் நோக்கில் நடைபெற்ற இந்த விழாவில், ரேம்ப் வாக், நடனம், யோகா, சிலம்பாட்டம் போன்ற கலைகளை போட்டியாளர்கள் தனியாகவும், குழுவாகவும் வெளிப்படுத்தினர்.

மேலும், இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து சிறப்பான பேஷன் ஷோவும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், “மன அழுத்தம் மற்றும் அதிகமான டிஜிட்டல் பயன்பாட்டிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான வாழ்வியலை நோக்கிச் செல்ல வேண்டும். அதேசமயம் நமது பாரம்பரிய பழக்கவழக்கங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்” என தெரிவித்தனர்.

போட்டிகளின் முடிவில்,ஆண்கள் பிரிவில் முதல் பரிசு – அனுஷ் கைலாஷ் A, இரண்டாம் பரிசு – மிச்சிலின் ஜாக்ஸ் M,மூன்றாம் பரிசு – அருண்குமார் R
பெண்கள் பிரிவில்
முதல் பரிசு – ஸ்வேதா M, இரண்டாம் பரிசு – பிரவேனா M, மூன்றாம் பரிசு – நிவேதா ஆகியோர் வெற்றி பெற்றனர்..

போட்டிகளில் ரொக்க பரிசாக முதல் பரிசாக ரூபாய் ஒரு இலட்சம்,இரண்டாம் பரிசாக ரூபாய் 75,000,மூன்றாம் பரிசாக ரூபாய் 50,000 என பரிசு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது…
தன்னம்பிக்கை, திறமை மற்றும் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்த இந்த ‘மிஸ்டர் அண்ட் மிஸ்’ விழா, பங்கேற்றவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *