ஓசூர் மார்ச் 3
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் திருவிழா மார்ச் 3 அன்று வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஆம்பியர் எலக்ட்ரிக் இரு சக்கர வாகன ஷோரூம் நிறுவனத்தார் மற்றும் விநாயகா பேக்கரி உரிமையாளர்கள், நண்பர்கள் சார்பாக பக்த கோடிகளுக்கு தர்பூசணி பழம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த ஆன்மீக நிகழ்வில் ஆம்பியர் நவீன், பிளவர் வேர்ல்ட் கிருஷ்ணமூர்த்தி, நாகேஷ், ஹேமந்த், ரமேஷ் ரெட்டி, சந்துரு, சுதாகர், விநாயகா பேக்கரி யாழினி, சரவணன், சஞ்சு, சுரேஷ், மாதேஷ், சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் ஓசூர் மாநகரத் தலைவர் பவுல்ட்ரி சோலைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜி.பி.மார்க்ஸ்
செய்தியாளர்