மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மாங்குளம் ஊராட்சி பஞ்சதாங் கிபட்டி கிராமத்தில், ஐ.சி.ஏ.ஆர் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட மக்க ளின் முன்னேற்றத்திற்கு டி.ஏ.பி.எஸ்சி என்ற திட்டத்தின் கீழ் கால்நடை சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நவீன முறையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. மதுரை கால்நடை மண்டல இணை இயக்குநர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். இந்த முகாமில் ஐ.சி.ஏ.ஆர் மூத்தவிஞ்ஞானி கனகா சுசிலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இந்த கால்நடை மருத்துவ முகாமின் மூலம் 232 மாட்டினங்களும், 321 வெளளாடுகளும், 115 செம்மறி ஆடுகளும், 200 கோழிகளும், 8செல்லப்பிராணிகளும் பயனடைந் தன. மேலும் 62 கால்ந டைகளுக்கு சிகிச்சை, 476 கால்நடைகளுக்கு குடற் புழுநீக்கம், 25 பசுக்களுக்கு ஸ்கேன் கருவி மூலம் சினை பரிசோதனை மற் றும் கருப்பை வளர்ச்சி தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் இம்முகாமில் கால்நடைகளுக்கு இலவச தாது உப்புகலவை வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் 127 விவசாயிகள் பயனடைந்தனர். முகாமில் கலந்து கொண்ட சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முகா மில் கலந்து கொண்ட மருத்துவர்கள் கால்நடை பராமரிப்பு கால்நடை வளர்ப்பு, நோய்தடுப்பு முறைகள், கால் நடை பெருக்கம் மற்றும் இன விருத்தி தீவன மேலாண்மை தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

மேலும் முகாமில் கலந்து கொண்ட கால்நடை உரிமையாளர் களுக்கு கால் நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *