திருவாரூர் செய்தியாளர் வேலா செந்தில்,
ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் குருபூஜை விழா..பக்தர்கள் தங்கள் கைகளால் பாலபிஷேகம் செய்து வழிபாடு
திருவாரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆனந்த பீடத்தில் மாசி உத்திரம் குருபூசை விழா நடைபெற்றது 03.03.26 அன்று மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்று அதனை தொடர்ந்து இன்று 04.03.26 மடப்புரம் பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பால்குடம் சுமந்து ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் மரத்திற்கு வந்தடைந்தனர்..
தொடர்ந்து அண்ணன் சுவாமிக்கு மஞ்சள் சந்தனம் தயிர் பன்னீர் நெய் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் மகா அபிஷேகம் நடைபெற்றது.. பக்தர்கள் தங்களது கைகளாலேயே பால் அபிஷேகம் செய்தனர் பிறகு அண்ணன் சுவாமிகள் அலங்காரம் செய்யப்பட்டு தூப ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து அனைவருக்கும் அருண் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.