தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிட திறப்பு விழா.
காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் துவக்கி வைப்பு.
மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 24 கோடி மதிப்பீட்டில் 62228.00 சதுர அடி பரப்பளவில் 6 தளங்களுடன் 100 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தார் .
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் நடைபெற்றது. மேலும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் ஈரோடு எம்பி பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாராபுரம் அரசு மருத்துவமனையில் பொதுப்பணித்துறை சார்பில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடத்தில் 6222800 சதுர அடி பரப்பளவில் 100 படுக்கை வசதியுடன் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. தரைதளம் 931200 ச.அடி பரப்பளவில் வரவேற்பறை கதிரியக்க அறை. சி.டீ.ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறை, ஆய்வகம் 2 எண்ணிக்கை, அல்ட்ரா கதிர்வீச்சு அறை, வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை, மருந்தக இருப்பு அறைகளுடன்.
முதல் தளம் 8826.00 ச.அடி பரப்பளவில் டயாலிசிஸ் வார்டு, பணி மருத்துவர் அறை பணி செவிலியர் அறை, தீவிர சிகிச்சை பிரிவு, பதிவறை, மருந்து இருப்பு அறை சாய்தளம், கழிவறை வசதிகள் ஆய்வகம் 2 எண்ணிக்கை, அல்ட்ரா கதிர்வீச்சு அறை, வெளிப்புற நோயாளிகளுக்கான இருதய சிகிச்சை அறை, மருந்தக இருப்பு அறைகளுடனும், இரண்டாம் தளம் 882600 ச.அடி பரப்பளவில் அறுவை அரங்கு 2 எண்கள், நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்தும் அறை பணிமருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, கழிவறை மற்றும் சாய்தள வசதிகளுடன்,
மூன்றாம் தளம் 8826.00 ச.அடி பரப்பளவில் பெண்களுக்கான மருத்துவசிகிச்சை பிரிவு மற்றும் அறுவைசிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு). ஆண்களுக்கான அறுவை சிகிச்சை வார்டு மருத்துவ சிகிச்சை பிரிவு பணி மருத்துவர்அறை பணி செவிலியர் அறைகளுடன், நான்காம் தளம் 8826.00 ச.அடி பரப்பளவில் ஆண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு (எலும்பு பிரிவு) பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை பிரிவு பணி மருத்துவர்அறை பணி செவிலியர் அறை சாய்தளம் கழிவறை வசதிகளுடன்,
ஐந்தாம் தளம்8826.00 ச.அடி பரப்பளவில் குழந்தைகளுக்கான பிரிவு, காப்பீடு திட்ட பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) பணி மருத்துவர் அறை, பணி செவிலியர் அறை, சாய்தளம். கழிவறை வசதிகளுடன் ஆறாம் தளம் தளம் 8826.00 ச.அடி பரப்பளவில் கண்சிகிச்சை பிரிவு (ஆண்கள் மற்றும் பெண்கள்) இரத்த வங்கி கூட்ட அரங்கம், சாய்தளம் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் கலெக்டர் ஆகியோர் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஆறு தளங்களுக்கும் நேரடியாக சென்று வசதிகள் எவ்வாறு உள்ளது என்பதையும் பார்வையிட்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.