கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் வருகின்ற செப்டம்பர் 17 தேதி அன்று நடைபெறவிருக்கும் திமுக கழகத்தின் கொள்கை திருவிழாவாம், முப்பெரும் விழா கரூர் கோடாங்கிப்பட்டியில் நடைபெற உள்ளது. அதனையொட்டி முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளரும்,
மேற்கு மண்டல பொறுப்பாளருமானவி.செந்தில் பாலாஜி தி.மு.க வின் முப்பெரும் விழாவிற்கான கால்கோள் நடபட்டு விழா பணிகளை துவக்கி வைத்தார். உடன் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.