பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவு பனி மூட்டத்தால் இன்று காலை சுமார் 9.00 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டுச்சென்ற வாகனங்கள் – வாகன ஓட்டிகள் கடும் அவதி

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று அதிகாலை முதல் சுமார் 9.00 மணி வரை பனிமூட்டத்தால் சூழ்ந்தது. பட்டுக்கோட்டை மட்டுமல்லாது அதன் சுற்று வட்டாரப் பகுதிகளானமுதல்சேரி, செட்டியக்காடு, பள்ளிகொண்டான், நடுவிக்காடு, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதல் சுமார் 9.00 மணி வரை பனிமூட்டத்தால் சூழ்ந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். குறிப்பாக தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் குளம், காசாங்குளம் ஆகியவை பனிமூட்டத்தால் சூழ்ந்தது. குறிப்பாக பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் அதிக அளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
பனிமூட்டத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *