தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம், டிசிடபிள்யூ நிறுவனத்தில் 55-வது தேசிய பாதுகாப்பு தின விழா நேற்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் தொடக்கத்தில், நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) கோ. ஸ்ரீநிவாசன் தலைமை தாங்கி பாதுகாப்பு கொடியை ஏற்றி வைத்தார். உற்பத்தித் துறை உதவித் தலைவர் எஸ். சுரேஷ் சிறப்புரை ஆற்றினார். நிறைவு விழாவில், தூத்துக்குடி தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கூடுதல் இயக்குநர் ஆர். சித்தார்த்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மூத்த செயல் உதவித்தலைவர் கோ. ஸ்ரீநிவாசன் தலைமையுரை ஆற்றினார். துணை உதவித் தலைவர் (பவர் பிளாண்ட்) கே. மீனாட்சி சுந்தரம் சிறப்புரை வழங்கினார். பாதுகாப்புத் துறைத் தலைவர் சி. ஆல்விஸ் கிப்ட் 2025-ம் ஆண்டிற்கான பாதுகாப்பு ஆண்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

விழாவில் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ரவிக்குமார், கருணாகரன், செல்வி விமலா தேவி, செல்வி லீஸ்மா, மற்றும் செல்வி ரீனா சாருன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், ஸ்பிக் மற்றும் சூப்பர் கேஸ் நிறுவன பிரதிநிதிகள், டிசிடபிள்யூ நிறுவன மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழாவின் இறுதியில் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக விழாவில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு இறைவணக்கம் பாடி, பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை டிசிடபிள்யூ நிறுவன பாதுகாப்புத் துறையினர் சிறப்பாகச் செய்திருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *