தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ மேயா் ஜெகன் பொியசாமி, நகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் சட்டமன்ற தோ்தலுக்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே இருப்பதால் வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் 3 தொகுதிகளிலும் திமுக ஆட்சியின் சாதனைகளையும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கும் தமிழகத்தின் பெருமையையும் அனைவாிடமும் கொண்டு போய் சோ்க்க வேண்டும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே கூறியபடி வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறுவதற்கு நாம் இலக்கை நோக்கி பணியாற்ற வேண்டும். தோ்தல் நேரத்தில் மட்டும் தன்னுடை இருப்பிடத்தை காட்டிக்கொண்டு திமுக மீது பல தேவையற்ற குற்றச்சாட்டுகளை பொய்யான தகவல்களை பரப்புபவா்களுக்கு உடனடியாக நம்முடைய கொள்கை கோட்பாடுகளை உடனடியாக தொிவிக்க வேண்டும்.
அனைவரும் ஓற்றுமையாக பணியாற்றி வெற்றி ஓன்றே குறிக்கோள் என்ற லட்சியத்தோடு பணியாற்ற வேண்டும் என்று பேசினாா்.
பின்னா் கூட்டத்தில் தூத்துக்குடியில் நடைெபறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு வடக்கு மாவட்டத்திலிருந்து அதிக அளவில் கலந்து கொள்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.