கோட்டைமேடு கிராமத்தில் மதுரை டியூக் லயன்ஸ் சங்கத்தின் சார்பில்
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
மதுரை டியூக் லயன்ஸ் சங்கம் சார்பில் அலங்காநல்லூர் அருகிலுள்ள கோட்டைமேடு கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமும், சமூகப் பணிகளும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மருத்துவ சேவைகள் குரு மருத்துவமனை மூச்சுத் திணறல், நீரிழிவு உடல் பரிசோதனை
ஹர்ஷிணி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பரிசோதனை
ப்ரீதிகா கண் மருத்துவமனை கண் பார்வை பரிசோதனை கண் நோய் கண்டறிதல்
பொதுமக்களுக்கு இலவச ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் வழங்கப்பட்டன.
தாய்ப்பால் விழிப்புணர்வு Ln. பாலவைஷ்ணவி, அவர்கள் தாய்ப்பால் குழந்தையின் ஆரோக்கியமான எதிர்காலத்தின் அடித்தளம் என வலியுறுத்தி உரையாற்றினார்.
கல்வி உதவி மணியஞ்சி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியருக்காக மேசை மற்றும் நாற்காலி வழங்கினர். இதை தலைவர் Ln.P. சிவராமன் (தக்ஷா குழும நிறுவனங்கள்) அவர்கள் வழங்கினார்.
பெற்றோர் இல்லாத 3 சிறுமிகளின் முழு கல்விச்செலவையும் தாம் மேற்கொள்ளுவதாக
ஜெயமுருகன் (நிழல் டிரஸ்ட் & குரு மருத்துவமனை) அவர்கள் உறுதியளித்தார்.
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு சைக்கிள் தனியாகச் செல்ல முடியாத சிறுமிக்கு மூன்று சக்கரச் சைக்கிள் வழங்கப்பட்டது.
இதற்கான நிதியுதவியை Ln. பாலா வைஷ்ணவி (ஸ்ரீ வெல்மெடிக்கல்ஸ்) அவர்கள் செய்துள்ளார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி தலைவர் Ln. P. சிவராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு Ln.பாலவைஷ்ணவி அவர்கள் மேற்கொண்டார்.
மேலும், லியோ லைஃப் டிரஸ்ட் தலைவர் ரமேஷ்,மற்றும் கோட்டைமேடு பாலாஜி, ராஜ்குமார், ஆகியோர் இணைந்து, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பங்கேற்பாளர்கள்
பட்டயத் தலைவர் Ln. Adv. இலங்கோவன், பொருளாளர் Ln. கார்த்திகேயன், உறுப்பினர் Ln. மஹாலிங்கம், Ln. Adv. கணேசன்ஆகியோர் கலந்து கொண்டனர்.