திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6- மணிக்கு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமிக்கு திருக்கல்யாண மஹாத்ஸவம், தீபாராதனை சிறப்பாக நடைபெற்று பக்தர்கள் , பொதுமக்களுக்கு அருட் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
திருக்கல்யாண மஹாத்ஸவத்தை சர்வசாதகம் சிவாகம் ப்ரவீன: சிவாகமரத்தினகரம் வேதாகம சிரோன்மணி பட்டீஸ்வரம் சிவ ஸ்ரீ ஈசான கும்பகோணம் ஆர்.ஜயப்ப சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ அகோர சிவ சந்திரசேகரபுரம் கே. எஸ். வீரமணி சிவாச்சாரியார், உபசாதகம் சிவாகம சூடாமணி உடையாளூர் ஜி. சுவாமிநாத சிவம், ஆலய அர்ச்சகர் சிவாகம பாஸ்கரா சந்திரசேகரபுரம் வி. சேகர் சிவம் மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் குடமுழுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ டி. ஸ்ரீராம் அய்யர், ஸ்ரீ என். கோபாலன் அய்யர், முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ ஆர். சந்திர மெளளி அய்யர் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமவாசிகள், பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா காட்சி நடைபெற்றது.
திருக்கல்யாண விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார்/ செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார், ஆய்வாளர் க.மும்மூர்த்தி, குடமுழுக்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ டி. ஸ்ரீராம் அய்யர், ஸ்ரீ என். கோபாலன் அய்யர், முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ ஆர். சந்திர மெளளி அய்யர் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.