துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள து.ரெங்கநாதபுரம் ரெட்டி நல சங்க திருமண மண்டபத்தில் செப்டம்பர் 11ந் தேதி து.ரெங்கநாதபுரம், செல்லிப்பாளையம் ஊராட்சிக்கு”உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.
இம்முகாமை எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்து பொது மக்களிடம் மனுக்கள் பெற்றார்.இம்முகாமில் துறையூர் வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன்,முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், வட்ட வழங்கல் அலுவலர் முத்து, மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, துரைராஜ், பெரியசாமி,பார்த்த சாரதி, மேலாளர் பாஸ்கர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதி கார்த்திக்,
மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரெங்கநாதபுரம் பிரபாகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார், கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இதில் 15 அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர்கள் பாபு (து.ரெங்கநாதபுரம்), மாலதி (செல்லிப்பாளையம்) ஆகியோர் செய்திருந்தனர்.இதில் சுமார் 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்