கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பில் பாரதியார் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாரதியாரின் வாழ்க்கை வரலாறு குறித்து தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி நினைவு கூர்ந்தார் கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியார் என்ற தலைப்பில் பேசினார்.
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமத்துல்லா நினைவு தினம் குறித்து பேசும் போது
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று, தனது கவிதைகள் மற்றும் எழுத்துகள் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வையும் தேசபக்தியையும் தூண்டினார்.
பாரதி கவிஞர் மட்டுமல்லாமல், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், மற்றும் சமூக சீர்திருத்தவாதி. இவர் பல இதழ்களையும் பத்திரிக்கைகளையும் வெளியிட்டு, தமிழ் மற்றும் இந்திய கருத்துக்களை பரப்பினார் என்று பேசினார். முன்னதாக பாரதியாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ஆங்கில ஆசிரியர் சிந்தியா பாரதியார் எழுதியுள்ள கவிதைகள் குறித்து பேசினார்.