கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் முதல் முறை முப்பெரும் விழா.. கரூரில் செப்டம்பர் 17ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் திமுக கழக முப்பெரும் விழாவிற்கான திடலையும், பணிகள் நடைபெறுவதையும் தமிழ் நாடு நகராட்சி நிர்வாகத்துறை, முதன்மைச் செயலாளரும், அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளரும், கரூர் மாவட்ட செயலாளருமான வி.செந்தில் பாலாஜி ஆகியோர் இணைந்து, மேற்பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர,மண்டல உறுப்பினர்கள் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள்,பொறுப்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.