போடிநாயக்கனூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சியில் நகரின் ஆகிய வார்டு பொது மக்களின் குறைகளை வீட்டிற்க்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி மேலாளர் முனிராஜ் தலைமையில் இங்குள்ள வார்டு 26 ல் உள்ள பாஸ்கரா திருமண மஹாலில் நடைபெற்றது
இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்க ளுக்கு உடனடி தீர்வாக வீட்டு மனை பட்டா புதிய குடும்ப அட்டை மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் ஆணையாளர் எஸ் பார்கவி ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த முகாமில் நகராட்சி பொறியாளர் குணசேகரன் முன்னாள் நகராட்சி நகர் மன்ற தலைவர் எம் சங்கர் நகரச் செயலாளர் ஆர் புருஷோத்தமன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா ரமேஷ் சுகாதார அலுவலர் மணிகண்டன் ஆய்வாளர்கள் திருப்பதி. சபீர் நகர் மன்ற கவுன்சிலர் மகேஸ்வரன் நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் கிருஷ்ணவேணி பச்சையப்பன் உள்பட நகர்மன்ற கவுன்சிலர்கள் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்