அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் இருந்து சென்னைக்கு புதிய குளிர்சாதன பேருந்தை போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சாசி சிவசங்கர் தொடங்கி வைத்தார்
பின்பு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கடந்த ஆட்சியில் பாழ்பட்டு கிடந்த போக்குவரத்து துறை தற்போது மறுமலர்ச்சி அடைந்து உயர்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தற்போது 11 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் முதல் கட்டமாக 4000 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது மீதி பேருந்துகள் வர இருக்கின்ற காலங்களில் பயன்பாட்டிற்கு வரும் இவ்வாறு பேட்டியின்போது அமைச்சர் கூறினார்.
விழாவில் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா அரியலூர் நகர திமுக செயலாளர் இரா முருகேசன் நகராட்சி தலைவர் சாந்தி கலைவாணன் அரசு வழக்கறிஞர் த ஆ கதிரவன் மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் சாமிநாதன் லதாபாலு அரியலூர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் தெய்வ இளையராசன் அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் அரசு போக்குவரத்து கழக தொமுச செயலாளர் பி வி அன்பழகன் துணைச் செயலாளர் சாமிநாதன் பொருளாளர் சித்திரவேல் முன்னாள் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன் மாலா தமிழரசன் நகராட்சி கவுன்சிலர்கள் பூக்கடைராமு குணா சத்தியன் புகழேந்தி மதிமுக அரியலூர் ஒன்றிய செயலாளர் கட்டுபிரிங்கியம் சங்கர் மத்திய திமுக ஒன்றிய அவைத் தலைவர் முத்துசாமி மற்றும் தென்பகுதி முத்து உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்