தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவ வைபவத்தையொட்டி மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதவியுடன் திருவீதி உலா வந்தார்.
மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பாளையத்தில். கே கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில், பவித்ரோற்சவ வைபவம், கடந்த புதன்கிழமை துவங்கியது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை அன்று , மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் விஸ்வக்சேன ஆச்சார்யர்களோடு, யாகசாலையில் பிரவேசம் செய்த நிலையில், சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மலையப்ப சாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மேளதாள இசையோடு பண்டிதர்கள் வேத மந்திரம் முழங்க , சுவாமி திருவீதி உலா நான்கு மாட வீதிகளின் வழியாக வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்