வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படும் வகையில் திருவொற்றியூர் மண்டலத்தில் தேர்தல் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி 1 வது மண்டல குழு தலைவர் தி மு தனியரசு மண்டல உதவி ஆணையர் பொறுப்பாளர் பாண்டியன். வருவாய் உதவி அலுவலர் அர்ஜுனன். செயற்பொறியாளர் பாபு. தேர்தல் துணை தாசில்தார் சோபியா. உட்பட பலர் கலந்து கொண்டு மண்டல அலுவலகத்தில் வண்ண வண்ண கோலங்களை போட்டு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர் கோலங்களை போட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கினர்.