தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வாழ்த்து
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியராக ப.நித்தியா அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களை காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர், அஇஅதிமுக விவசாய பிரிவு தஞ்சாவூர் மேற்கு மாவட்ட தலைவர் ஏகேஆர்.ரவிச்சந்தர் அவர்களும், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க செயலாளர், அஇஅதிமுக செயல் வீரர் முனைவர்.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் அவர்களும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் எழுதிய புத்தகம் வழங்கி பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.
மேலும் கோட்ட அளவில் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள்.