கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் அ. ரகமத்துல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 1 2025 அன்று தீர்ப்பின் படி பணியில் உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற வேண்டும் எனவும், 23/07/2011க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டுமெனவும் , உச்சநீதிமன்றம் தீர்ப்பு அண்மையில் வழங்கியிருந்தது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் முறையான கல்வித் தகுதியுடன் தான் ஆசிரியர் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்படி இருக்கையில் முன் தேதியிட்டு அவர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினால் தான் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவித்துள்ளது ஆசிரியர் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வந்ததிலிருந்து வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் ஆட்சியில் இருக்கும் வரை எந்த ஒரு ஆசிரியர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாயிலாக அனைவருக்கும் தெரிவித்தனர்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தீர்ப்பு வந்ததிலிருந்து ஆசிரியர்கள் பக்கம் முழுமையாக நின்று அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் விதமாகவும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தொடர்ந்து நம்பிக்கையுடன் பேசி வந்தனர்.
கல்வித்தரம் மற்றும் ஆசிரியர்களுக்கு என நீதி ஆகிய இரண்டையும் உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது .
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக
மறு ஆய்வு மனு பணியில் உள்ள ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையை நிலை நிறுத்துவதோடு எதிர்கால நியமனங்களுக்கு டெட் தேர்வை கட்டாயமாக கடைபிடிக்கும் நோக்கத்தோடு தாக்கல் செய்யப்படுகிறது.
விரைவில் ஆசிரியர் நலன் சார்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசால் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டதற்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
ஆசிரியர்களுக்கு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுக்கக் கூடியது திராவிட மாடல் அரசு என்பதை அனைத்து ஆசிரியர் நன்கு உணர்ந்துள்ளனர். கலைஞரின் வழித்தோன்றுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு ஆசிரியர் சமூகத்துடன் உறுதியாக நிற்கிறது என்ற நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆசிரியர்களின் நலன்கள் காக்கப்பட்டு ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி தரும் உரிமையை பாதுகாத்திடும் வகையில் நியாயமான மற்றும் முழுமையான தீர்வுகளை பெரும் வகையில்
ஆசிரியர்களின் உரிமையை பாதுகாக்க மிகத் தீவிரமாக செயல்பட்டு வருவதற்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
முறையான கல்வித் தகுதியோடு ஆசிரியர் பணியில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விலக்கு அளிக்கலாம் என ஏற்கனவே சட்டத்தில் உள்ளதை கருத்தில் கொண்டு அனைத்து பணியில் உள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதி தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளி முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களையும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.