கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வு..
கரூர் கோடாங்கி பட்டியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் திமுகவின் கழக முப்பெரும் விழாவிற்கான திடலையும், ஏற்பாடு பணிகள் நடைபெறும் இடங்களை வீட்டு வசதி துறை அமைச்சர் க.முத்துசாமி மற்றும் முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல பொறுப்பாளரும், கரூர் மாவட்ட செயலாளருமான வி.செந்தில் பாலாஜி ஆகியோர் இணைந்து விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி, குளித்தலை எம்.எல்.ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ மாநகர, மண்டல உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.