திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்..
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம் நடைபெற்றுவருவதை திருவாரூர் மாவட்ட கலெக்டர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள்.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டின் சட்டமன்ற அறிவிப்பு எண்.33-ன்படி தமிழகத்தில் மருத்துவ வசதி குறைந்த, சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் மருத்துவ வசதி குறைவாக அமைந்துள்ள நகர்ப்புறப் பகுதிகள் குடிசைப்பகுதிகள் போன்ற பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
முகாம்கள் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொது மருத்துவம் பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம் மகப்பேறு மற்றும் பெண்கள் நலன், குழந்தைகள் நலன், இருதய நோய்ப்பிரிவு, மூளை நோய் பிரிவு, தோல் மருத்துவம் பல் மருத்துவம், கண் மருத்துவம் காது, மூக்கு, தொண்டை, இரத்த பரிசோதனைகள் மனநல மருத்துவம் இயன்முறை மருத்துவம் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம், கதிரிக்கவியல், சர்க்கரை நோய் ஆயுஸ் மற்றும் சமூக–பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 40 வயதிற்கு மேற்பட்டவர்களை இலக்காகக் கொண்டு நலம் காக்கும் ஸ்டாலின் உயர்மருத்துவ சேவை முகாம் செயல்பட்டுவருகிறது.
அதனடிப்படையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம் நடைபெற்றுவருவதை திருவாரூர் மாவட்ட கலெக்டர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள் முகாம்கள் உள்ளாட்சி அமைப்புகள் பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை தொழிலாளர் நலன் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகிறது
முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம் எக்கோ அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எக்ஸ்-ரே முதலியவை) காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், மேலும் பதினைந்து துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் (பொது மருத்துவம் அறுவை சிகிச்சை இதயவியல் உள்ளிட்ட துறைகள்) வழங்கப்படுகிறது.
மேற்கண்ட பரிசோதனைகள் மட்டுமன்றி தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது.
முகாமில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் அசோக் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் சங்கீதா இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் ஜெயகுமாரி திருத்துறைப்பூண்டி வட்டார சுகாதார அலுவலர் மருத்துவர் பாலதண்டாயுதபாணி திருத்துறைப்பூண்டி நகர்மன்றத்தலைவர் கவிதா பாண்டியன் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் துர்கா திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் பரமேஸ்வரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்