திண்டுக்கல் மாவட்டம் பழனி தேரடி பகுதியில் உள்ள வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் மாரியம்மன் மாசி திருவிழாவை முன்னிட்டு 51 ஆம் ஆண்டு வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் சார்பாக கலை நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சங்கம் ஆண்டுதோறும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா போல் பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை விமர்சையாக கொண்டாடும் வகையில் கலை நிகழ்ச்சிகள் பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்கள் சின்னத்துரை நட்சத்திரங்களை அழைத்து வந்து விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இதன் அடிப்படையில் 51 ஆம் ஆண்டை முன்னிட்டு வருகின்ற 8ம் தேதி ஞாயிறு கிழமை மாலை 8.00 மணி அளவில் தேரடி திடலில் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் கலை நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் குறித்தும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை கலந்து ஆலோசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றன.
மேலும் இவ்விழாவை அனைத்து பொதுமக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்..