கடலூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில் குமார் பார்வையிட்டார்

கடலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு நடப்புகள் குறித்தும், தேர்தலின்போது நேர்மையான முறையில் ஜனநாயக கடமையினை ஆற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


அந்தவகையில் இன்றைய தினம் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்களை வாக்காளர்களாக இணைத்துக் கொள்வது குறித்தும், ஜனநாயக முறைப்படி வாக்காளர்கள் நேர்மையாக தங்களுக்கான வாக்கினை செலுத்துவது குறித்தும், வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு மேற்கொள்வது குறித்தும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய ரங்கோலி கோலங்கள் போடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் விழிப்புணர்வு ரங்கோலி கோலப் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிவு வழங்கப்பட்டது.


மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. எனவே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்கினை கண்டிப்பாக பதிவுசெய்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *