தென்காசி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலின் கிரிவலப் பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலில் ஆகும் இந்த மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் கோயிலின் மூலவராக குமாரசாமி உள்ளார்.

இங்கு குமாரசாமி தீர்த்தம் பூஞ்சனை தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளது இந்த மலைக்கு திரு என்று அழைக்கும் புகழ்பெற்ற மழையாகும் திருமலை கோயில் என்று புகழாரம் சூடும் பிரசித்தி பெற்ற முருகன் திருத்தலமாகும் இத்திருத்தலத்திற்கு அறங்காவலர் குழு தலைவராக கடையநல்லூர் சார்ந்த தொழிலதிபரும் சிறந்த முருக பக்தருமான அருணாச்சலம் என்பவர் பல ஆண்டுகளாக திருப்பணிகளை செய்து வருகிறார்.


இக்கோயிலுக்கு பக்தர்கள் சுமார் 650 படிகள் ஏறிச் செல்ல வேண்டியிருக்கிறது. இதனால் வயதான பக்தர்கள் சிரமப்பட்டனர். மலைப்பாதை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் மற்றும் அறங்காவலர்கள் முயற்சியால் தமிழக அரசு ரூ.5 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை அமைக்க அனுமதியளித்து
கடந்த 2009-ம் ஆண்டு இதற்கான பணியை அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பuன் துவங்கி வைத்தார்.

இரண்டரை கி.மீ. தூரமுள்ள இப்பாதையில் 5 பெரிய பாலங்கள் உள்பட பலர் கலந்து கொண்டு திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கிரிவலப் பாதை அமைப்பதற்கு உபயதாரர்கள் மற்றும் கோவில் நிதியிலிருந்து சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்படவுள்ள 2 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான முன்னோட்டப் பணிகள் சிறப்பாக துவங்கப்பட்டது.

இந்நிலையில் கிரிவலப் பாதை அமைப்பதற்கான சிறப்பு பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா திருமலை குமாரசாமி திருக்கோவில் உதவி ஆணையர் கோமதி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம் முன்னிலையிலும் நடைபெற்ற பூஜை விழாவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பண்பொழி எம் எஸ் இசக்கி வடகரை பாப்பா அழகைக் கணேசன் குற்றாலநாதர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சக்தி முருகேசன் திருக்கோவில் கணக்கர் லட்சுமணன் அர்ச்சகர் ரமேஷ் உள்ளிட்ட இந்து அறநிலையத்துறை ஊழியர்கள் அதிகாரிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

திருப்பணிகளின் தலைவராக தற்போதும் உள்ள அருணாச்சலம் அவர்களின் மிகச்சிறந்த முயற்சியால் சொந்த செலவில் இத்திருக்கோவிலுக்கு தங்க தேர் வழங்கி இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது திருப்பணிகளை வெகுவாக முன்னெடுத்து வரும் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை பக்தர்களும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *