C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூர், தெரு வியாபாரிகளை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாநகர விற்பனை குழு உறுப்பினர்கள் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். விற்பனை குழு கூட்டத்தை நடத்தி முடிவு செய்யாமல் சட்டத்திற்கு புறம்பாக தெரு வியாபாரிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற
வேண்டும்.இடம் மாற்று வழங்காமல் தெரு வியாபாரிகளை அப்புறப்படுத்த கூடாது என்பது உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பாலு தலைமை தாங்கினார். தங்கராசு, செல்வம்,ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் துரை,மாநில தலைவர் சந்திரகுமார் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செய லாளர் குணசேகரன், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், என்.எப். டி.இ. தேசிய செயலாளர் ஸ்ரீதர் மற்றும் ஜெயராஜ்.அரசு பணியாளர் சங்கம் சுந்தரராஜா, மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் வளர்மதி வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்