மன்னார்குடி., மார்ச்.06

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூன்றாம்சேத்தி ஊராட்சி சின்னம்மா நகர் பகுதியில் சுமார் 600க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருந்து வந்தது இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சின்னமா நகர் குடியிருப்பு பகுதிக்கு புதிய தார் சாலை போடுவதற்காக நிதி ஒதுக்கிடு செய்து ஜல்லி மட்டும் போட்டு மூன்று மாதமாகியுள்ளது.

இந்த குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி , கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் , வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியும் இரவு நேரங்களில் முதியவர்கள் சாலையில் நடக்க முடியாமல் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஜல்லி மட்டும் போட்டுள்ள இந்த சாலையை தார் சாலையாக சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை குறித்து ஒப்பந்தகாரரிடம் கேட்டதற்கு விரைவில் போதிய நிதி வந்தவுடன் சாலையை தார் சாலையாக மாற்ற முடியும் என தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *