கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம், தொழிற்பேட்டை அடுத்துள்ள மேலப்பாளையம் கிராமம்,எஸ்.ஆர்.எம் திருமண மண்டபம் எதிராக கிழக்கில் மாருதி நகரில் அமைந்துள்ள
அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
முருகப்பெருமானின் மூன்றாம் படையாகிய பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு புதிய ஆலயமாக கரூர் மாவட்டம், கரூர் வட்டம், மேலப்பாளையம் கிராமம், மாருதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு சர்வ வல்லபை கணபதி, அருள்மிகு ஞான தண்டாயுதபாணி சுவாமி. ஸ்ரீ மத் போகர் சித்தர், அருள்மிகு இடும்பன் சுவாமி, அருள்தரும் புவனநாயகி உடனாகிய அருள்மிகு புவனநாதர், அருள்மிகு காலபைரவர். அருள்மிகு நவகிரக சுவாமிகள் அருள்மிகு நாக கன்னிகை சுவாமிகள் அமைக்கப்பட்டு ஆலய திருப்பணிகள் சிற்ப சாஸ்த்திர முறைப்படி செவ்வனே செய்து பஞ்சவர்ணங்கள் தீட்டிவேத பாராயணம், திருமுறை பாராயணம் மூல மந்திர ஹோமங்கள் திரவியாகுதி, மஹா பூர்ணாஹீதி தீபாராதனை,மங்கள் இசை வேத பாராயணம், திருமுறை பாராயணம் மூல மந்திர, மாலாமந்திர ஹோமங்கள் சண்முக டாடிக் ஹோமங்கள், நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி திரவியாருதி மஹா பூர்ணாஹீதி விசேஷ உபச்சாரங்கள், கடம் புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் தசதானம். தசதரிசனம் செய்து சிவாகம முறைப்படி கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் வருகை தந்த அனைத்து பக்தர்கள்,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பல பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இவ்விழா ஏற்பாடுகளை ஓம் ஸ்ரீ கந்த ஆசிரமம், அருள்மிகு ஞான தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.