மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம்
தென்காசி : மார்ச் – 06
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ் தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. தொடர்ந்து நம் நாட்டின் பண்பாட்டினையும் கலாச்சாரத்தினையும் வலியுறுத்து விதமாக குத்து விளக்கு ஏற்றப்பட்டது.
இவ்விழாவானது கல்லூரியின் தலைவர் பொறியாளர் ஜீசஸ் ராஜா அவர்களின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் கனக பாண்டியன் முன்னிலை வகித்தார்.இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சுரண்டை காமராஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் முனைவர் அருள் முகிலன் மற்றும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியின் இயற்பியல் துறையின் உதவி பேராசிரியர் சாய் கௌரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனை தற்போதைய அறிவியல் படைப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து மாணவர்கள் புரியும் வகையில் எளிமையாக விளக்கி கூறினார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் வினாடி – வினா, தொழில்நுட்ப காணொளி நிகழ்வில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 30-க்கும் மேற்பட்ட புதுமையான படைப்பாற்றல் மிக்க அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி நிறைவில் தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.