நவராத்திரி விழா இன்னும் இரு தினங்களில் துவங்கு வதையொட்டி மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரியில் நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடை பெற்றுவருகிறது.
விளாச்சேரி கிராமத்தில் 200-க்கும் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மைகள் மதுரை மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடகம் கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங் களுக்கும் அனுப்பப் படுகின்றன.
இந்நிலையில் வருகிற 23 ம் தேதி நவராத்திரி விழா தொடங்கு வதையொட்டி நவராத்திரி கொலு பொம்மைகள் செய்யும் பணியில் தொழிலாளர்கள்மும் முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வருடம் தோறும் புது விதமான பொம்மைகள் அறிமுகப்படுத்த படுகின்றன. இந்த ஆண்டு ‘அஷ்ட பைரவர் குடமுழுக்கு செட்’ என புதிதாக பொம்மை களைச் செய்து விற்கின்றனர். இந்தப் பொம்மைகள் அங்குலம் முதல் ஒன்றரை அடிவரை களிமண்ணால் தயாரிக்கப் படுகின்றன. மேலும் வாடிக்கையாளர் களின்
விருப்பத்துக்கு ஏற்ப ஓரடி முதல் 2 அடி வரை காகிதக் கூழால் பொம்மைகள் செய்யப்பட்டு விற்க தயாராக உள்ளன.
நவராத்திரி விழாவுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களும் இங்கு வந்து பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.