விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு அருகாமையில் இருக்கும் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகின்றனர்

இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தினத்தன்று தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடித்து நீர்நிலைகளில் திதிகொடுப்பது வழக்கம்.

முன்னோர்களை வழிபாடு செய்ய உகந்ததாக கருதப்படும் தை, ஆடி மாதங்களைத் தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை சிறப்பு வாய்ந்தாகும்

வருடம் தோறும் வரும் 12 மாத அமாவாசைகளில் திதி கொடுக்க மறந்தவர்களும், முன்னோர்களின் திதி நட்சத்திரம் தெரியாதவர்களும், தை ஆடி அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்நாளில் திதிகொடுக்க மறந்தவர்களும் இந்நாளில் மூதாதையர்களுக்கு திதிகொடுக்கலாம் என்பது ஐதீகம்.

அதன்படி புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி ஶ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறை அய்யாளம்மன் படித்துறை தில்லைநாயகி படித்துறை ஓடத்துறை படித்துறை ஆகிய புன்னியநதியாம் புனித காவிரி ஆற்றில் நீராடி பின்னர் தங்களது மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்

இதில் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, காரைக்குடி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் அதிகாலையே வருகை தந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பின்னர் வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் மற்றும் திருவாணைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து விட்டு செல்கின்றனர்.

திருச்சி செய்தியாளர் அருள் மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *