கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் நகர தலைமை நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஸ்ரீ தரன் தலையில் வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
முன்னதாக தவெகவின் வால்பாறை நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் அனைவரையும் வரவேற்ற நிலையில் நகர இணைச்செயலாளர் செய்யது அலி கண்டன முழக்கம் எழுப்பினார்.
அதைத்தொடர்ந்து தவெகவின் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே.விக்னேஷ் கண்டன உரையாற்றினார் அதைத்தொடர்ந்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 425.40 ரூபாயை வழங்கிட வலியுறுத்தியும், நகராட்சி கால்பந்து மைதானத்தை சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் சீர் செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மக்களிடம் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு வளர்ச்சி பணி செய்யாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெகவின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்