திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் வசிக்கும் 16 வயது சிறுமி, பெற்றோர் இறந்ததால் அக்கா வீட்டில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது, அக்காவின் கணவர் சாமுவேல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சிறுமி மூன்று மாத கர்ப்பமடைந்ததாகத் தகவல். இது தொடர்பாக திருவரம்பூர் மகிளா காவல் நிலைய போலீசார் சாமுவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மண்ணை
க. மாரிமுத்து.