கோவை மாவட்டம் வால்பாறையில் அதிமுகவில் நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் மயில் கணேசன் தலைமையில் தெருமுனை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் வால்பாறையில் உள்ள ரொட்டிக்கடை பகுதியில் அதிமுகவினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
அப்போது பேசிய ஒரு மகளிர் அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு வழங்கிய தாலிக்கு தங்கம், பெண்கள் பாதுகாப்பு, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் பயனடைந்தோம் தற்போதுள்ள திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடைகள், தாலிக்கு தங்கம் ரத்து இதுபோன்ற நிலை தொடராமல் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று பாதுகாப்போடு வாழ அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்
இப்பிரச்சாரத்தின்போது நகர துணைச்செயலாளர் பொன் கணேசன், நிர்வாகிகள் ரொட்டிக்கடை ரமேஷ், எம்.ஆர்.எஸ்.மோகன், எஸ்.கே.எஸ்.பாலு, சண்முகவேல், சண்முகம் மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்