அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது மாவட்ட செயலாளரும் மாநில துணைத்தலைவருமான த சகுந்தலா ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்

செந்துறை ஒன்றிய செயலாளர் சந்திரா முன்னிலை வகித்தார் மாவட்ட துணைச் செயலாளர் சந்திரா மாநில செயற்குழு உறுப்பினர் கவிதா மாவட்ட துணைத்தலைவர் மங்கலம் மாவட்ட பொருளாளர் ரம்யா உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ரூ 10 லட்சம் ரூ 5 லட்சம் பனிக்கொடையாக வழங்க வேண்டும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளை போல மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *