ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் வருவாய்த் துறையினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் இரவு வரை நடத்தினர்.கமுதி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு 8 மணி வரை வட்டாட்சியர் ஸ்ரீராம் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
மண்டல துணை வட்டாட்சியர்கள் வெங்கடேஷ்வரன், வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் வட்ட வழங்கல் அலுவலர் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்கலந்து கொண்டனர்.
இதில் “உங்களுடன் ஸ்டாலின் “திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளித்திட வேண்டும். இதில் உள்ள பணி நெருக்கடிகளை குறைத்திட வேண்டும்.
மேலும் இதற்கான அடிப்படை வசதிகள் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றும்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை கால முறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்.மேலும் அரசு பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்தின் வறிய சூழல்
மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கருணை அடிப்படை பணி
நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து ஏற்கனவே இருந்ததைப் போன்று 25 சதவீதமாக நிர்ணயம் செய்திட வேண்டும். இது
போன்று 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் இரவு 8 மணி வரை நடைபெற்றது.