தஞ்சாவூர் மாவட்ட செய்தாயாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர். மார்ச்.7.
தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) 21-வது பட்டமளிப்பு விழா பான் செக்கர்ஸ் கல்விக் குழுமத் தலைவர் தலைமை அன்னை முனைவர் மரிய பிலோமி தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி மரியம்மாள் அவர்கள் வரவேற்புரை யாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி விக்டோரியா 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் அமைப்பு சார் அறிவியல் பள்ளியின் புலத்தலைவரும் பேராசிரியருமான முனைவர் மஞ்சுகாரி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது, இந்தக் கல்வி நிலையம் உங்களுக்கு வெறும் பாடங்களை மட்டும் கற்றுத்தரவில்லை. உங்கள் மனதில் உயரிய கனவுகளை விதைகளாகத் தூவியிருக்கிறது. நீங்கள் பெற்ற இந்தக் கல்வி, வெறும் மதிப்பெண் சான்றிதழ் அல்ல, அது சமூகத்தின் இருளை அகற்றும் சுடர் என பேசினார்
கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி விக்டோரியா பட்டமளிப்பு விழா உறுதிமொழியை கூற மாணவிகள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கம் வென்ற நான்கு மாணவிகளுக்கும், தரவரிசையில் இடம் பிடித்த 205 மாணவிகளுக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அனைத்து மாணவிகளும் தங்களது பட்டமளிப்புச் சான்றிதழ்களை சிறப்பு விருந்தினரின் முன்னிலையில், பெற்றோரின் கையால் பெற்றுக் கொண்டனர். 960 இளங்கலை மாணவிகள் 232 முதுகலை மாணவிகள் என 1192 மாணவிகள் பட்டம் பெற்றனர்.
கல்லூரியின் முன்னாள் மாணவியர் சங்கப் பேரவைத் தலைவி சையத் ஆசியா பானு இக்கல்லூரியில் தாம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள், துணை முதல்வர்கள், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.