சென்னை சமூக சேவை சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா

– 2026, மாதவரம் தொகுதி, மணலி புதுநகர் அய்யா கோவில் தெருவில் 16 வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமையில்“ஒன்றாக சேர்ந்து பங்களிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை உருவாக்குவது” என்ற தலைப்பில் நடைபெற்றது.

சென்னை சமூக சேவை சங்க நிர்வாகிகள் அருட்சகோதரி மேரி தமிழரசி, செல்வி ரூபினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ கலந்துகொண்டு பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு செய்து வரும் பல்வேறு திட்டங்களையும், பயன்களையும் எடுத்துரைத்து இன்றைய சமுதாயத்தில் பெண்கள் தங்களுடைய கல்வி,தனித்திறமை ஆகியவற்றின் மூலம் படைத்திட்ட சாதனைகளையும், வளர்ச்சியையும் விளக்கி, தொகுதி சார்பில் 1500 பேருக்கு புடவை, தையல் கலை பயின்ற 20 பேருக்கு தையல் இயந்திரம், மற்றும் சுய தொழில் செய்ய பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் ரூ 56.26 கோடி மற்றும் இந்தியன் வங்கி மணலி புதுநகர் கிளை சார்பில் ரூ 1.93 கோடி,சமூக சேவை சங்கத்தின் சார்பில் வாழ்வாதாரக் கடன் ரூ1.65 கோடி என மொத்தம் ரூ 59.84 கோடி ரூபாய் 412 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி தொகையாக வழங்கி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பெண்களின் கிராமிய கலை இசை நிகழ்ச்சி நடைபெற்று பரிசுகளை வழங்கப்பட்டன. இக்னேஷியஸ் சிநேகிதன் சினேகிதி அறக்கட்டளையின் நிறுவனர் செல்வி இன்பா,மண்டல சுகாதார அலுவலர் மருத்துவர் தேவிகலா, காவல் கண்காணிப்பாளர் ஜே.பி. பிரபாகர், வங்கி மண்டல மேலாளர் மோகன், அருட்தந்தை எம்.வி.ஜேக்கப்,பெண்கள் கூட்டமைப்பு சார்பாக 1852 உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *