வடகோவையில் உள்ள கோவை மாவட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் பேராசிரியர் அவர்களின் நினைவு நாளில் அவரது திருவுருவப் புகைப்படத்திற்கு கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் கோவை மாநகர் மாவட்டம் வர்த்தகர் அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் வழி நின்று கழகம் காத்த பெருமகனார் இனமான பேராசிரியர் அவர்களே இன்று நீங்கள் மறைந்து 6 ஆண்டுகள் ஆகிறது தாங்கள் காட்டிய வழியில் நின்று கழகத் தலைவர் தளபதியோடு இணைந்து கழகப் பணிகளை செவ்வனே ஆற்றுவோம்.

பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி
கழகத்திற்குச் சோதனை வந்தபோதெல்லாம் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்து, வெற்றிக் கோட்டை கட்டியவர் பேராசிரியர்.

“பேராசிரியர் சம்மதித்தால் இது நடக்கும்” என்று கலைஞரே வியந்த அந்தப் பேராற்றல், இன்று நமது #DravidianModel ஆட்சிக்கு அடிப்படை!

கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு கழக உடன்பிறப்புகளுக்கு ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர்.

தூய்மையான பொது வாழ்வும், சமரசமற்ற கொள்கைப் பற்றும் கொண்ட அவரது வழியில், உறுதியேற்போம்!​இனமானப் பேராசிரியரின் நினைவைப் போற்றி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம்! திராவிட மாடல் ஆட்சியைத் திக்கெட்டும் கொண்டு செல்வோம்!
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
வெல்வோம் ஒன்றாக….

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *