உலகம் முழுவதும் உலக மகளிர் தின கொண்டாடப்பட உள்ளது இந்த மகளிர் தின விழாவை முன்னிட்டு கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கூறியது விவரம்

அடுப்பு ஊதும் பெண்களுக்கு, படிப்பு எதற்கு என்ற அஞ்ஞான காலம் போய் தற்போது நாம் அனைவரும் விஞ்ஞான காலத்தில் வாழ்ந்து வருகிறோம்…

பெண் என்பவள் தாய். பிரபஞ்சத்தை உருவாக்கிய மகாசக்தி, பண்டைய காலத்தில் பெண்களை அடிமைகளாகவும் போக பொருளாகவும் வைத்திருந்தனர், ஆனாலும், ஒரு குழந்தைக்கு அதன் தந்தையை அடையாளப் படுத்தும் சிறப்பு உலகத்திலேயே வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லை. அதனால்தான் பெண் உலகின் சக்தியாக திகழ்கிறாள் ஆதி காலத்தில் ஒரு கூட்டு சமுதாயமாக ஆதி மனிதர்கள் வாழ்ந்தப் போது வேட்டையாடிய பொருட்களை அனைவருக்கும் பகிர்ந்து அளித்து தனியாக இருந்த மனித சமுதாயம் பெண்களை முன்னிலைப்படுத்தி, தாய் வழி சமுதாய அமைப்பாக மாற்றி சிறிது சிறிதாக நாகரிகம் அடைந்த ஒரு அமைப்பாக மாறி இன்றைய உலகம் விஞ்ஞான உலகமாக மாறுவதற்கு பெண்கள் தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.

அதன் பிறகு குடும்ப அமைப்பிற்கு தன்னை உட்படுத்திக் கொண்ட பெண்ணினம் தனக்கென உரிய அனைத்து செயல்பாடுகளையும், விருப்பங்களையும் துறந்து தனது வம்சம் விருத்தி பெற தன்னைத்தானே தியாகம் செய்தவர்கள்தான் பெண்கள் இதனை சாதகமாக்கி கொண்ட ஒரு கூட்டம் சனாதானம் என்ற பெயரில் பெண்களின் ஆசை, சுதந்திரம், கல்வி உள்ளிட்ட சிந்தனைகளை சிதறடித்து கொத்தடிமைகளாக வைத்திருந்த நேரத்தில்

நமது தமிழினம் மட்டுமே பெண்களை தாங்கள் போற்றி வணங்கும் தாயாக தெய்வமாக, இயக்கும் சக்தியாக, கல்வியாக, இலக்கண இலக்கியமாக, வாழ்வியலின் ஒளியாக, மாற்றி, போற்றி வாழ்கின்றனர். அதனால் தான் அவ்வையார் முதலான புலவர்களும் வானவன் மாதேவி, வேலு நாச்சியார், குயிலி உள்ளிட்ட வீராங்கனைகளும் அன்னை தெரசா போன்ற சமூக சேவகர்களும், முத்துலட்சுமி ரெட்டி, சரோஜினி வரதப்பன் போன்ற அறிவியல் அறிஞர்களும் தோன்றி பெண்ணியத்தை வளர்த்தனர். தற்போதைய பெண்களின் இமாலய வெற்றிக்கும், ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சொத்தில் சமபங்கு வழங்கி உரிமை அளித்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சமூகத்தில். பெண்களின் உரிமை மிகவும் சிறப்பாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது அதனால் தான் வனிதா நெப்போலியன் என்ற என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர் கூட நகர்மன்றத் தலைவராக கம்பம் நகரின் தந்தையாக ஆட்சி அதிகாரத்திற்கு வர முடிந்தது என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். இவ்வாறு நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *