குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மகளிர் தினவிழா,பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம்,அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு விழா எனமுப்பெரும் விழா வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

மாநில பொருளாளரும், மாவட்ட செயலாளருமான மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் மகாலிங்கம், பொதுசெயலாளர் காமராஜ்,மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டியன்,மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.


இந்நிகழ்வில் வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன்,மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன்,ஒன்றிய செயலாளர் சார்லஸ் ஜேம்ஸ்,ஒன்றிய பொருளாளர் வேளாங்கண்ணிசங்கர்,
ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜோதிசேகரன்,ஒன்றிய தலைவர்செல்வகுமார்,
மாநிலத்துணைத்தலைவர் அமுதா,செயற்குழுஉறுப்பினர் ஆரோக்கியதாஸ் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *