திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, திருச்சி மக்களின் சார்பில் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தேன்.
முதலில், எனது தொடர் கோரிக்கையான திருச்சி – திருப்பதி இடையே ஶ்ரீரங்கம் வழியாக தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது குறித்து வலியுறுத்தினேன். மேலும், தற்போது இயக்கப்பட்டு வரும் திருச்சி – சார்லப்பள்ளி சிறப்பு ரயிலை நிரந்தர விரைவு ரயிலாக மாற்றவும் கேட்டுக்கொண்டேன்.
இத்துடன், கடந்த (22.02.2026) அன்று DRM அவர்களை சந்தித்தபோது முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தேன். அவற்றில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திருச்சி – மயிலாடுதுறை ரயில் எண் 16833/34க்கு நிறுத்தம் வழங்குதல், சமயபுரம் பூச்சொரிதல் திருவிழாவின்போது DEMU சிறப்பு ரயில் இயக்கம், திருச்சி – கரூர் – சேலம் இடையே ஷட்டில் ரயில் சேவை இயக்கம், குறிப்பிட்ட இடங்களில் முன்மொழியப்பட்டுள்ள ரயில்வே மேம்பால திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை, வடக்கு உக்கடை – அரியமங்கலம் பகுதியில் சப்வே அமைத்தல் மற்றும் G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வாக Elevated Rotary அமைப்பது தொடர்பான தற்போதைய நிலை குறித்து விவாதித்தேன்.
எனது கோரிக்கைகளை கவனமாகக் கேட்டுக் கொண்ட திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அவர்கள், அவற்றை சாதகமாக பரிசீலித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறினார் துரை வைகோ
திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்