திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதிமுக தெற்கு மாவட்டம் நகர செயலாளரின் சண்.சரவணன் இல்ல மணவிழாவிற்காக வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ மணமக்களை வாழ்த்தினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது… சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது.
மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் சின்னம் என்ன என்பதை கூட்டணி தலைமையும் எங்கள் இயக்கத்தின் சார்பாக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எந்தவிதமான மன கஷ்டமும் கிடையாது.
எங்களுடைய தேவைகளை தலைமைக்கு எடுத்துக் கூறியுள்ளோம் எண்ணிக்கையும் சின்னத்தையும் திமுக கூட்டணி தலைமை என்பது மிகவும் கண்ணியமாக செயல்படுகிறது. எத்தனை தொகுதி எந்த சின்னம் என்பதை எங்கள் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தலைவர் வைகோ பொருத்தம் வரைக்கும் சட்டமன்ற தேர்தலில் நிற்பாரா நிற்க மாட்டாரா என்பது குறித்து அவர் எடுக்கும் முடிவு தான் வருங்காலங்களில் வைகோ நாடாளுமன்றம் செல்லக்கூடிய சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.
2026 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரைக்கும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கும் அதிமுக தலைமையிலான பாஜக சார்ந்த கூட்டணிக்கும் தான் போட்டி நிலவும் மற்ற இயக்கங்களை பொறுத்த வரைக்கும் போட்டியில் கலந்து கொள்கிறார்கள்.
திமுக , அதிமுகவுக்கான போட்டிதான் கடந்த காலம் திமுகவினுடைய செயல்பாடுகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது. தொழில் வளர்ச்சி மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியது சமூக நீதி அடிப்படையில் அடித்தட்டு மக்கள் தேவைகளை நிறைவேற்றியது
வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
இரண்டாவது இடம் யார் என்பதும் முதலிடம் யார் என்பதும் பேசுவதற்கான நேரம் அல்ல மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டணியில் பாஜக பொதுக் கூட்டத்தில் பெரியார் படத்தை அகற்றிவிட்டு தாமரைப் படத்தை வைத்துள்ளது. இது பாஜாவுக்காவுக்கு பெரிய விஷயம் அல்ல ஒரு திராவிட இயக்கமான பெரியார் அண்ணா வழியில் வந்த அதிமுகவினர் இந்த நிகழ்ச்சிகள் பங்கேற்கிறார்கள்.
பெரியார் படத்தை அகற்றும்போது இதற்கு முதல் கண்டனம் எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து தான் வந்திருக்க வேண்டும். ஏன் அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை. திராவிட இயக்கமாய் இருந்து கொண்டு திராவிட இயக்கமாக செயல்படுவது அல்ல இது அதிமுகவிற்கு நல்லதல்ல
தமிழகத்தில் உள்ள அனைத்து திராவிட கட்சிகளும் இதற்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளது இந்த கேள்வியை பத்திரிகையாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி இடம் கேட்க வேண்டும்.
அதேபோல திருச்சியில் ரயில்வே நுழைவாயில் ஹிந்தி மொழியில் பெயர் பலகை வைத்துள்ளார்கள். ஈரான் இஸ்ரேல் போரில் அப்பாவி மக்கள் தான் இறந்துள்ளார்கள். இது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த இரு நாட்டு போர் மூலம் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்த வரைக்கும் பெட்ரோல் டீசல் மண்ணெண்ணெய் கேஸ் மிகப்பெரிய தட்டுப்பாடு வரலாம் இதனால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்வதற்கான காரணமா இருக்கலாம்.
ஈரான் இஸ்ரேல் அமெரிக்க போர் வந்து அந்த நாடுகள் மட்டுமல்லாது உலக நாடுகள் குறிப்பாக வளர்கின்ற நாடுகள் இந்தியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கும் இந்த போர் தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.