பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் மகளிர் தின வாழ்த்து செய்தி….
தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள மகளிர் உரிமைத் தொகை 80 சதவீதம் பெண்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதித்துவத்தத்தில் இட ஒதுக்கீடு விடியல் பயணத் திட்டம் இதன் மூலமாக வாழ்வாதாரத்திலும் சுய சிந்தனைகளிலும் பல முன்னேற்றங்கள் மகளிர் அடைந்துள்ளார்கள்
இதனை மேம்படுத்தும் வகையில் மகளிர்க்கு சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் கொண்டு வந்ததால் மிகச் சிறப்பாக இருக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்துள்ள மகளிருக்கு விளையாட்டு துறையிலும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் முழங்கும் திட்டத்தில் பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவிகள் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்
மேலும் பல உடல் உபாதைகள் சரியாகின்றன. இதனால் ஜாதி மதம் வேறுபாடு இல்லாமல் சமத்துவமாக குழந்தைகள் ஒரே இடத்தில் விளையாடுகிறார்கள். இதேபோன்று திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த பிறகு கட்சி மாநாடுகள் ஏதேனும் சமுதாய கூட்டங்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களும் பாதுகாப்புடனும் தைரியத்துடன் எந்தவித பயம் இல்லாமல் வெளியே செல்கிறார்கள்.
மகளிர் உரிமை தொகை கொண்டு வந்தது போல் வீட்டில் இருக்கும் பெண்கள் கைம்பெண்கள் மற்றும் ஊடகற்ற பெண்களுக்கு சுய தொழில் ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைவார்கள் கூடுதலாக துணை முதல்வர் பதவியில் மகளிர் ஒருவருக்கும் பதவி அளித்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து இவ்வாறு பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் விடுத்துள்ள மகளிர் தின செய்தியில் கூறியுள்ளார்.