காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சிப்காட் தொழிற் பூங்காவில் இயங்கி வரும் மின்னனு தொழில்நுட்ப கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனமான இன்னோவி மொபிலிடி சொலுஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிப்காட் சாலையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் என 1500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த மாரத்தான் போட்டியானது சிப்காட் சாலையில் 3 , 5 மற்றும் 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.
10 கிலோமீட்டர் பிரிவை இன்னோவி மொபிலிடி சொலுஷன்ஸ் நிறுவனத்தின் பிரசாத் , வாசு , அரவிந்த், சந்தோஷ்குமாரும் 5 கிலோமீட்டர் பிரிவை திருப்பெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்செல்வியும்
மற்றும் 3 கிலோமீட்டர் பிரிவை JK Fenner நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு தலைமை அலுவலர் பரகத்துல்லா மற்றும் இந்தியாவின் முதல் மனிதவள மேம்பாட்டு திருநங்கை அலுவலர் மதுமிதாவும் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும், ஊட்டச்சத்து பானங்களும் வழங்கப்பட்டன. வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இன்னொவி மொபிலிடி சொலுஷன்ஸ் இந்தியா நிறுவனத்தின்
நிர்வாக அலுவலர்கள் லோகேஷ்வரன், நாகலட்சுமி, ரவிச்சந்திரன், ஜெனிபர், பிரவின் குமார், டீரீம்ஸ் பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்