சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவையில் கே.எம்.சி.ஹெச் சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம்

மக்கள் அதிகம் கூடும் இரயில் நிலையம்,வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் ஆரோக்கியம் மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை சார்பில் கோவையின் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

நகரம் முழுவதும் விழிப்புணர்வு செய்யும் நோக்கத்துடன் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சி முன்னதாக கோவை இரயில் நிலையத்தில் துவங்கியது..

கே.எம்.சி.எச்.
தலைவர் மருத்துவர் நல்லா ஜி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் கீதாஞ்சலி மற்றும் இரயில் நிலைய இயக்குனர் பழனியப்பன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்…

கேஎம்சிஹெச் மருத்துவமனை உயரதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இதில், பயணிகள் மற்றும் இரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் இதில் பங்கேற்று, தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சரவணம்பட்டி புரோசோன் மாலில் (Prozone Mall) நடைபெற்ற நிகழ்ச்சியில் கேஎம்சிஹெச்-ன் செயல் இயக்குனர் *டாக்டர் அருண் N பழனிசாமி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்..

நிகழ்ச்சியில் பேசிய அவர்,மருத்துவமனைக்கு உள்ளே மட்டுமல்லாது, வெளியிலும் பெண்களின் நல்வாழ்விற்காக கேஎம்சிஹெச் தொடர்ந்து அதிநவீன பரிசோதனைகள் முதல் கிராமப்புற மருத்துவ முகாம்கள் வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருவதாக ,டாக்டர் அருண் N பழனிசாமி குறிப்பிட்டார்.

மகளிர் தின கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்தும் வகையில், இரண்டு இடங்களிலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை குலுக்கல் முறையிலான போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும், மருத்துவப் பரிசோதனைகளுக்கான சலுகைக் கூப்பன்களும் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *