மதுரை அவனியாபுரத்தில் மறியலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் கைது..!
மதுரை அவனியாபுரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி,
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் வி.வி.இராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ மற்றும் ஐ.டி.விங் மாநிலச் செயலாளர் ராஜ்சத்யன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.
கைதான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.பா.சரவணன் நேரில் சந்தித்து குடிநீர், பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கி கலந்து கொண்டார்.