அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அவர்களை வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் நீதிமன்றத்திலேயே ஷூ வால் தாக்க முயன்றார் இதை கண்டித்தும் இந்த வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அரியலூர் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இரா மனோகர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார் செயலாளர் ராஜா பொருளாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் வழக்கறிஞர் பகுத்தறிவாளன் கண்டன உரை நிகழ்த்தினார் மூத்த வழக்கறிஞர் லட்சுமிபதி அரசு வழக்கறிஞர் த ஆ கதிரவன் முத்துக்குமார் விஜயகுமார் செல்வநம்பி ராஜாசிற்றம்பலம் பாண்டித்துரை சின்னராஜா ராஜசேகர் நூர்தின்ராஜா எஸ்.பாலாஜி சுகுமார் கஜேந்திரன் கௌசல்யா சரண்யா உட்பட ஏராளமான வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்