திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பொதுமக்களிடம் நேரடியாக சேர்க்கும் வண்ணம் அதிமுகவின் திண்ணைப் பிரச்சாரம் உருட்டுகளும் திருட்டுகளும் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் ஏரலில் நடந்தது.
தூத்துக்குடி
நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்வி கடன் ரத்து, 100 ரூபாய் கேஸ் மானியம் உள்ளிட்ட பத்து வகையான என பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து ஆட்சிக்கு வந்து இன்றுவரை செயல்படுத்தாத திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில், தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட ஐடி விங் பொறுப்பாளர்கள் தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதன், தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அசோக்ராஜ், ஆகியோர் முன்னிலையில் கழகத்தினர் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட ஏரலில் பஜார், காந்தி சிலை, பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வியாபாரிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியின் அவல நிலைகளை எடுத்துக் கூறியும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்த துரோக பத்திரிகையை மக்களிடம் வழங்கினர். அதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் தங்களது மதிப்பெண்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி , முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார் , மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், உடன்குடி ஒன்றிய பொறுப்பாளர் உரக்கடை குணசேகரன், ஏரல் நகரச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட அம்மா பேரவை துணைதலைவர் ரத்தினசபாபதி, மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தினேஷ், வர்த்தக அணி இணை செயலாளர் சிவக்குமார், ஜெயசிவசுப்பிரமணியம், மணியன், எஸ்.பி.எம். ராஜா, சுந்தர், ரமேஷ், அர்ஜூன், அழகுராமகிருஷ்ணன், அய்யா பிள்ளை, கிங்ஸ்டன், ஜெஸ்வின், கண்ணன், கார்த்திகேயன், பண்ணீர், லெட்சுமணகுமார், சதீஷ், ஜோசப்லாரண்ஸ், முத்துவேல், நவனீதன், பெரியசாமி, வி.பி.பாண்டியன், பண்டாரவிளை பால்துரை, சுரேஷ் , முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், ஐடி விங் சொக்கலிங்கம், ஸ்ரீவை தினேஷ் பொன்ராஜ், அக்ஷய் லிங்கம், சிதம்பரராஜா, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ்Ï, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.