பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை திருவாரூரில் உற்சாகமாக கொண்டாடிய பாட்டாளி மக்கள் கட்சியினர்
முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல்வேறு இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாளை பாமகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேருந்து நிலையத்தில் குடவாசல் பாமக தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜவ் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

தொடர்ந்து இந்தியாவிற்கு உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் கொண்டுவந்த தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உள்ளிட்ட இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடினர் இதில் பாமக மாவட்டத் துணைத் தலைவர் எஸ் கே. அழகர்
தெற்கு ஒன்றிய செயலாளர் கே. வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *